தள்ளாடும் அரசியலுக்குள் தாம் தள்ளப்பட்டதாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்
இலங்கைக்கான மூலோபாய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியத்தை ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.
பலாங்கொடையில் நடைபெற்ற ‘பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தற்போதைய நிலையை கடந்த 77 வருடங்களின் சாபம்’ என்று கூறப்படுவது தவறான கருத்தாகும்
உண்மையான சவால்கள் 1977இற்குப் பின்னரே தொடங்கின. ஆனால், சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசியலில் ஒரு விரிவான தேசிய மூலோபாயம் இல்லை.
நாட்டின் சவால்கள்
எனவே, நாட்டிற்குத் தேவைப்படுவது அபிவிருத்திக்கான மூலோபாயத் திட்டமாகும். அரசியலுக்கு வருவது எனது உண்மையான நோக்கத்தின் ஒரு பகுதி அல்ல.
அரசியலில் என்னை நான் கற்பனை செய்ததில்லை. எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை, இருப்பினும், இந்த நாட்டின் தலைமையும், நாங்கள் ஆதரித்த தலைவர்களும் தள்ளாடுவதைக் கண்டு, ஒரு பொறுப்பான, வரி செலுத்தும் குடிமகனாக முன்னேற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
நாங்கள் உதவிய இந்த நாட்டின் தலைவர்கள் என்றாவது ஒரு நாள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை.
எனினும், இறுதியில் அவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். அதனால் நான் அந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |