மூத்த ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முக்கிய பொறுப்பு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரியும், மூத்த ஊடகவியலாளருமான ஏ.எல்.எம். முக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறையில் பல தசாப்தங்களாக சிறப்பாக சேவையாற்றியதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வழங்கிய நியமனம்
அத்துடன் இவர், கல்வி நிர்வாகத்திலும் ஊடகத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய அவரது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கல்வி, நிர்வாகம் மற்றும் சமூகப் பணிகளில் நீண்டகால அனுபவம் பெற்ற இவர், தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைக்குழுவில் இணைந்திருப்பது கிழக்கு மாகாண மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகிறது.
மேலும், அவரது ஆழமான அறிவு, நிர்வாக அனுபவம் மற்றும் சமூகப் பார்வை ஆகியவை ஆணைக்குழுவின் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும், நாட்டின் அரச சேவை மற்றும் ஓய்வூதிய மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளில் பயனுள்ள பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றது.