உக்ரைன் ஜனாதிபதி முதன்முறையாக தலைநகருக்கு வெளியே பயணம்!
முதல் பயணம்
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான கிழக்குப் போர்முனையில் உள்ள கார்கிவ் பகுதியில் உள்ள துருப்பினரை சந்தித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்த பின்னர், தலைநகர் கியேவ் பகுதிக்கு வெளியில் அவர் மேற்கொண்ட முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
கார்கிவ் நகரில் உள்ள இடிபாடுகளை ஆய்வு செய்த குண்டு துளைக்காத ஆடையை அணிந்திருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி கார்கிவ்வுக்கு சென்று திரும்பிய பின்னர் நகரில் பல பெரிய வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கார்கிவ் மற்றும் பிராந்தியத்தில் 2,229 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
எங்கள் நிலத்தை பாதுகாப்போம்
இந்தநிலையில் கடைசி படையினர் இருக்கும் வரை “எங்கள் நிலத்தை பாதுகாப்போம்” என்பதை ரஷ்யர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் போராடுவோம், நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்." என்று ஸெலென்ஸ்கி அங்கு குறிப்பிட்டுள்ளார்.