ஜனாதிபதி அநுரவின் கிழக்கு நோக்கிய பயணம் விரைவில்
வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Kanthasamy Prabu) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதியின் வருகையால் பெரு நன்மைகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (1) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை நாம் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டு மக்களிடத்தில் அக்கறை கொண்டு நாம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் மக்களின் வரிப்பணங்களைக் கொண்டு பல கட்டடங்களை கட்டி விட்டு சென்று இருக்கின்றன. அந்த கட்டடங்களில் பெரும்பான்மையான கட்டடங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், பராமரிப்பற்ற நிலையிலும் காணப்படுகின்றன.
நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி தற்போது க்ளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றார்.
அந்தவகையில் பயன்படுத்தாமல் இருக்கின்ற கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு கழுதாவளையிலேயே அமைந்திருக்கின்ற விசேட பொருளாதார மத்திய நிலையமும் அடையாளம் காணப்பட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதற்காக நாங்கள் வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.
பொருளாதார விடயங்களைக் கருத்திற் கொண்டு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அனைவரும் வாழ்க்கை கொண்டு நடத்த முடியாத நிலையில் காணப்பட்டனர். இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய நிலைமையிலிருந்து புதிய முன்னேற்றகரமான நிலைமைக்கு இந்த நாட்டை முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
ஜனாதிபதி விஜயம்
அந்த அடிப்படையில் பயன்படுத்தாமல் இருக்கின்ற கட்டடங்களை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதற்காக நன்மைகள் கிடைப்பதற்காக திறந்து வைத்து வருகின்றோம்.
அந்த வகையில்தான் இந்த விசேடபொருளாதார மத்திய நிலையமும் இந்த பிரதேச உற்பத்தியாளர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், வியாபாரிகள், உள்ளிட்ட அனைவரும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக நன்மையை பெறவேண்டும் என்பதற்காகத்தான் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்று திறந்து வைத்திருக்கின்ற இந்த விசேட பொருளாதார நிலையம் இன்று மாத்திரம் செழிப்பாக இல்லாமல் தொடர்ச்சியாக இது செயல்படுவதற்கும், இயங்குவதற்கும், வியாபாரத்தில் ஒரு மத்திய தளமாக செயல்படுவதற்கும், அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும்.
அதனூடாக களுதாவளை பிரதேச மக்கள் மாத்திரம் இன்றி மாவட்ட மக்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் அதற்காக இதனை மாற்றி அமைக்க வேண்டும்.
வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் அதனால் பெரு நன்மைகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
