கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் A9 வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார், அதே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதுடன், குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் பாரிய வாகனங்கள் பிரதான வீதியில் பயணிக்காதமையால் உயிராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.