சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பாராட்டுப் பரிசாக, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கு 100 மில்லியன் ரூபாயும், உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்திற்கு 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்..
பொதுநலவாய (Commonwealth) விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 75 மில்லியன் ரூபாயும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 50 மில்லியன் ரூபாயும், சார்க் (SAARC) விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 15 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, இப்போட்டிகளிலும் பிற சர்வதேசப் போட்டிகளிலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்பவர்களுக்கும் பாராட்டுப் பரிசுகளை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாா குறிப்பிட்டுள்ளார்.