2027 - வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு - ஆரம்பமானது அமர்வு

Anura Kumara Dissanayaka Budget 2027
By Benat Nov 12, 2026 08:37 AM GMT
Report

புதிய இணைப்பு

அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

சுதந்திரத்திற்கு பிறகு இருந்த குடும்ப ஆட்சியை முறியடித்து அந்த அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். 

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் நிலை ஒரு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.  ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டமை எமது வலுசக்தித் துறையை பெரும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.  

இன்றிருக்கின்ற பொருளாார சவாலை எதிர்கொள்வதோடு, எதிர்கால சந்ததியினர் அந்த சவால்களை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.  

பல்வேறு துறைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியுள்ளோம்.

2025 ஆம் ஆண்டில், நடப்புக் கணக்கு 1,719 மில்லியன் அமெரிக்க டொலர் உபரியைப் பதிவு செய்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவாகும்.

இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் 9 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த கடன் விகிதம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெற்றிகரமாக 95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் காரணமாக 2008 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை ரத்து செய்ததிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தம் 528 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

அன்றில் இருந்து தற்போதுவரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடுமையன நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.  

2025 ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 4,042 மில்லியன் டொலர்களைச் செலவிட்டது.

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 4,487 மில்லியன் டாலர்களை எட்டியது; இது முந்தைய ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட மொத்தச் செலவை விட அதிகமாகும். 

மக்களின் அர்ப்பணிப்புக்கு நீதியை நாம் நிலைநாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

திறைசேரியில் நிதி இருப்பதாக  கூறுகின்றீர்களே என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படித்தான், அவசரத் தேவைகளுக்காக திறைசேரியில் நிதி சேமிப்பு அவசியமானது.  அதனால்தான் டித்வா நெருக்கடியை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது.  

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் 1.6 பில்லியன் டொலர்களாக இருந்தன. அதேவேளையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், வாகன இறக்குமதிகள் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்துள்ளன.

இதனுடன் எரிபொருள் இறக்குமதிக்கான கூடுதல் செலவான 2 பில்லியன் டொலரையும் சேர்த்தால், நாடு 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருப்பினும், இத்தகைய செலவுகள் இருந்தபோதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 முதலாம் இணைப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் பொருட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.  

இந்தநிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இன்று காலை  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US