இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் கோரத் தாண்டவம்! தீர்வு தொடர்பில் கோட்டாபயவின் உறுதி
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களில் ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பான வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சுயேட்சை உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்ததாக அந்த குழுவின் உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் லலித் எல்லாவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan