நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களை செய்து இணக்கப்பாடுகளை எட்டிப் பயணிப்பதை தவிர மாற்று வழிகள் இருப்பதாக நான் கருதவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும், அடுத்து வரும் 6
மாதங்கள் கடினமானவை. அதனைக் கடந்தே ஆகவேண்டியுள்ளது. கடக்க முடியாது என்று
திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது" என கூறியுள்ளார்.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam