கல்வித் துறையை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சிக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி நாட்டின் கல்வித் துறையின் நிர்வாகத்தை இராணுவ தளபதியிடம் கையளிக்க முயற்சிக்கும் விதத்தை காணக் கூடியதாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கையாண்ட அனைத்தும் அழிந்து போயுள்ளன. சுகாதாரம், கமத்தொழில் அழிந்துள்ளன.
ஜனாதிபதி தற்போது கல்வித் துறையையும் அழிக்க போகின்றாரா என நாங்கள் கேட்கிறோம். ஜனாதிபதி அந்த துறையில் தலையிட்டுள்ளார்.
இலவச கல்வி என்பது நாட்டின் பிள்ளைகளுக்காக இருப்பது. தற்போது அதற்கும் ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமித்துள்ளார். ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து, நாட்டில் மீதமாக இருக்கும் இலவச கல்வியையும் அழிக்க போகிறார்.
இதுதான் எமக்குள்ள பிரச்சினை. கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் கல்வித் துறைக்கு பொறுப்பாக இராணுவ தளபதியை நியமிக்க போகிறார் என்பதையே எம்மால் உணர முடிந்தது.
ஜனாதிபதியின் தனது பதவிக்காலத்திற்குள் நாட்டின் இரண்டு துறைகளை அழிவின் விளிம்பை நோக்கி தள்ளியுள்ளார். சுகாதாரம் மற்றும் கமத்தொழில் துறைகளுக்கு ஏற்படுத்திய நிலைமையை கல்வித் துறையிலும் ஏற்படுத்தி விட வேண்டாம் என நாங்கள் ஜனாதிபதிக்கு கூறுகிறோம் என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri