பொங்கல் தினத்தன்று யாழிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பொங்கல் நிகழ்வு
அதன் பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்துகொள்ளவுள்ளார்.

மறுநாள் 16ஆம் திகதி காலை 9 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வார்.
இறுதியாக, மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மைதானத்தில் "முழு நாடும் ஒன்றாக..." போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.