கோட்டாபய பதவி துறக்க முன்னர்... விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகும் முன்னர் அமைச்சரவையை கலைக்க வேண்டும் என கட்சிசார்பற்ற போராட்டகாரர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியையும் பிரதமரையும் நாடாளுமன்றம் தெரிவு செய்யும்

அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர், புதிய ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் என அந்த அமைப்பின் பிரதிநிதியான மருத்துவர் திலங்க சமரசிங்க கூறியுள்ளார்.
ரணில் எந்த வகையிலும் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படக்கூடாது

ரணில் விக்ரமசிங்கவை எந்த வகையிலும் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கக்கூடாது. எனினும் ரணில் விக்ரமசிங்க புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவியை வகிப்பதை தமது அமைப்பு எதிர்க்கவில்லை எனவும் மருத்துவர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam