அமைச்சர்கள் மத்தியில் கோட்டாபயவின் பகிரங்க அறிவிப்பு (Video)
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நியமனத்தை வழங்கிய பின்னர் அமைச்சர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையை நியமிக்கும்போது அனுபவத்தில் மூத்தவர் என்ற விடயம் குறித்து சிந்திக்கவில்லை.
அமைச்சரவை பொறுப்புகள் வெறுமனே நன்மையான விடயங்கள் மாத்திரமில்லை. அவை பெரும் பொறுப்புணர்வு.
புதிய அமைச்சரவையிடமிருந்து நேர்மையான, திறமையான, களங்கமற்ற அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
அனேகமான அரச நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ளன. அதற்கு தீர்வை காண வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 17 அமைச்சர்கள் நியமனம்: முழுமையான விபரம் வெளியானது (Video)
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam