தமிழ் மக்களின் விடயங்களை கண்டுக்கொள்ளாத அநுர! குற்றஞ்சாட்டும் செல்வம் எம்பி
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை.
ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று.இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகின்ற அக்கறையா?
ஜே.வி.பி.அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜனாதிபதி எவ்வாறு இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒரு படி குரலை உயர்த்தி கூறுகிறார் ஜனாதிபதியினுடைய கூற்றிற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் அருகதையற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |