ஜனாதிபதி செயலகத்தின் 56 வாகனங்களை காணவில்லை! தேசிய கணக்காய்வு அலுவலகம்
ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 56 வாகனங்களை காணவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்டதா இல்லையா என்பதனை உறுதி செய்வதற்கான உரிய பரிசோதனைகள் நடத்தப்படவில்ல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு ஆகியனவற்றின் முகவரிகளின் கீழ் தனிப்பட்ட நபர்களின் பெயரில் 45 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் முகவரிகளின் கீழ் தனிப்பட்ட நபர்களின் பெயர்களில் ஏன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடாத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனாதிபதியின் செலவுகள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
