நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள கணிப்பு
இலங்கையின் வரலாற்றில் இது மிகவும் அமைதியான தேர்தல் இன்று நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), இன்று (14) பிற்பகல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை, பஞ்சிகாவத்தை அபேசிங்கராமய விகாரையில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தினார்.
அரசியல் வெற்றி
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், தமது கட்சிக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்கும் என தனது கணிப்பை வெளியிட்டார்.

இந்தநிலையில், தமது வெற்றியைத் தொடர்ந்து ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கோ உறுப்பினர்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தலுக்கான பிரசாரம், இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான, ஜனநாயக ரீதியில் இடம்பெற்றது. இது நமது நாட்டு மக்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri