ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்புக்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு
ஜனாதிபதி செயலகம், தமது கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல்களை வகுத்து சுற்றறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட உள்ளது.
அதன்படி, கடிதத் தலைப்புக்கள் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தனிப்பட்ட வணிகத்தை நடத்துவதற்கு அல்லது தனிப்பட்ட உதவிகளைக் கோருவதற்கு மற்றும் விசா பரிந்துரைகளை வழங்கச் செயலகத்தின் கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடைசெய்யப்படும்.
கடிதத் தலைப்புகள்
ஜனாதிபதி செயலக ஊழியர்களாக இல்லாத சிலர் கூட பயன்படுத்துவதாகக் கூறப்படும் கடிதத் தலைப்புகள் தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்தே இந்த சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
