அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதி நியமனம்
அரசியலமைப்பு பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath)நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayaka) இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றம்
மேலும், அரசியலமைப்பு சபையின் புதிய உறுப்பினராக பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர வேண்டும்.
இந்தநிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் முதன்முறையாக ஒக்டோபர் 09ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
அரசியலமைப்பு பேரவையில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
