ஜனாதிபதியின் திட்டங்களும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை : செந்தில் தொண்டமான்
கடந்த 15வருடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தபோதும் கடந்த ஒன்றரை வருடத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியபோதும் அவரது திட்டங்களும் செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேசியா சென்றபோது இந்த நாடு பொருளாதார ரீதியிலிருந்து குறுகிய காலத்தில் மீட்சிபெற்றது குறித்து அந்த நாட்டு அரசியல்வாதிகள் வியப்பினை வெளியிட்டதாகவும் அதற்காக காரணம் இந்த நாட்டினை தலைமையேற்று நடாத்திய ஜனாதிபதியின் செயற்பாடுகள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிரந்தர நியமனம்
உள்ளுராட்சிமன்றங்களில் தற்காலிக சேவையாற்றிவரும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று(17)மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் நகரசபைகள்,பிரதேசசபைகளில் கடமையாற்றும் அனைத்து வகையான தற்காலிக ஊழியர்கள் என 483பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்க்கு மாகாண பிரதம செயலாளர்,இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் த.ரொஸ்;மன்,இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தஜிவரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் சிலர் தமது அரசியல் இருப்பிற்காக இனங்களை பிரித்தாளும் நிலைமையை ஏற்படுத்துவதாகவும் அதற்குள் சிக்குண்டுசெல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டினை முன்னேற்ற முன்வரவேண்டும் எனவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |