தமிழ் எம்.பி.க்கள் - ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று
வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்றைய தினமும் (15.05.2023) நடைபெறவுள்ளது.
கடந்த 11ஆம் திகதி வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான இரண்டாவது சந்திப்பு மறுநாள் 12ஆம் திகதி இடம்பெறவிருந்தபோதும், நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியிருந்தமையால் பேச்சு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் மலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri