பீ.பி.ஜயசுந்தரவின் ராஜினாமா தொடர்பில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை?
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வழங்கப்பட்ட ராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் 31ம் திகதி பதவியை ராஜினாமா செய்வதாக பீ.பி.ஜயசுந்தர தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 31ம் திகதி வரையில் காத்திருக்காது முன்கூட்டியே பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை பீ.பி.ஜயசுந்தர ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு முன்கூட்டியே பதவி விலகுவதனால் புதிய செயலாளர் விரைவில் கடமைகளை பொறுப்பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளராக கடமையாற்றி வரும் காமினி செனரத், ஜனாதிபதியின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எதிர்வரும் 31ம் திகதி பதவி விலகுவதற்கு திட்டமிட்டிருந்த பீ.பி.ஜயசுந்தர, எதிர்வரும் 15ம் திகதி பதவி விலக உள்ளார் எனவும், அந்த பதவி வெற்றிடத்தை காமினி செனரத் உடனடியாக நிரப்புவார் எனவும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri