இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க விருப்பம்! கோட்டாபயவின் அதிரடி தீர்மானம்
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு இடைக்கால அரசொன்றை அமைக்க ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார் என கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுக்கும் பதில் அனுப்பியுள்ளார்
இது தொடர்பான கடிதம் பௌத்த அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நேற்று காலை மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
அதில், புதிய அமைச்சரவை தீர்வாகாது என்றும் உரிய தீர்வு இன்றேல், சங்க கட்டளையை பிறப்பிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.



