வரலாற்று தவறை சரிசெய்யும் தீவிர முயற்சியில் ஜனாதிபதி ரணில்
வரலாற்று தவறை சரி செய்து அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சென்று நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அநுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி வணக்கத்திற்குரிய பன்னானந்த நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.
கோட்டாபயவின் வருகையின் பின்னணியிலுள்ள மர்மம் அம்பலம் |
நாட்டின் எதிர்காலம் கருதி நடவடிக்கை
ஒன்றிணைந்து செயல்படாததால் நாடு பின்னோக்கி சென்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறினார்.
உலகில் ஏனைய நாடுகள் சாதனைகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, நாம் ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தினால் எமது நாடு பின்னோக்கி நகர்கின்றது.
அந்த வரலாற்று தவறை சரிசெய்து அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! கடும் மன வருத்தத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் |