நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி, புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL196 இல் நேற்று (21.07.2023) வெள்ளிக்கிழமை இரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதியுடன் 17 பேர் அடங்கிய குழுவினர் இந்தியாவின் புதுடில்லிக்கு 20 ஆம் திகதி வியாழக்கிழமை சென்றிருந்த நிலையில் குறித்த குழுவினரும் ஜனாதிபதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பொருளாதார பங்களிப்பு தொடர்பில் விஜயத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், ஒருவருடத்தின் பின் இந்தியாவுக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
