இன்று யாழ்ப்பாணம் செல்கின்றார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10.02.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண கலாச்சார நிலைய கையேற்பு, வடக்கின் ஐந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்தி பங்கேற்புடனான சுதந்திர தின நிகழ்வு, இசை நிகழ்ச்சி என்பனவற்றில் நாளை (11.02.2023) ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னேற்பாடு நடவடிக்கைகள்
ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான
முன்னேற்பாடு பற்றிய கலந்துரையாடல் நேற்று (09.02.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
