இலங்கை மக்களுக்கு ரஷ்யா இரங்கல்
இலங்கையில் ஏற்பட்ட அண்மைய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான அழிவுகள் குறித்து ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிபப்தாகத் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான காலத்தில் ரஷ்யா, இலங்கையுடன் இணைந்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமான இயற்கை பேரழிவுகளில்
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் தனது அனுதாபங்களையும் ஆதரவையும் பகிருமாறு அவர் இலங்கை ஜனாதிபியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான இந்நிலையிலிருந்து மீள்வதற்காக இலங்கையில் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெற்று வரும் வேளையில் வந்துள்ளது இந்த இரங்கல் செய்தியை ரஷ்ய ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |