கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ள ஐந்தாவது நபர்
தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ளதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நான்கு பெயர்கள் முன்மொழிவு
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் நான்கு பெயர்களை முன்மொழிந்திருந்தார்.

மேலும் அரசியலமைப்பு சபை அதன் நிர்வாக அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தாததால் கணக்காய்வாளர் நாயகம் பதவி இன்று வரை வெற்றிடமாக உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam