சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்தின் சேவை காலத்தை நீ்ட்டிக்க பரிந்துரை
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்தின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதைய சட்டமா அதிபர் இந்த மாத நடுப்பகுதியில் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டு இறுதி வரையில் சேவையில் நீடிப்பதற்காக இவ்வாறு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
எவ்வாறெனினும், சஞ்சய் ராஜரட்னம் சேவை நீடிப்பு பெற்றுக்கொள்ளாது ஓய்வு பெற்றுக்கொண்டால் பிரதம நீதியரசராக நியமனம் பெறும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள்
இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதியினால் நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பரிந்துரைகள் குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியல் சாசனப்பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சாசன பேரவை நாளைய தினம் கூடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் பேராயர் சபையுடனான இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் குழுவில் சட்ட மா அதிபர் அங்கம் வகிப்பதாகவும், அதில் அவர் முக்கிய பங்காற்றுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சட்ட மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |