கோட்டாபயவின் புண்ணியத்தில் நாங்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்: விரக்தியில் மக்கள் (Video)
ஜனாதிபதியின் புண்ணியத்தில் நாங்கள், உண்டும், குடித்தும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நாங்கள் வரிசைகளில் நிற்கவில்லை. எமக்காக ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பொதுமகன் ஒருவர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மக்கள் கருத்துக்களை எமது செய்தி சேவை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றது.
எனவே இது தொடர்பில் பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வந்தார். எமக்கு கோவிட் பிரச்சினைகள் இல்லை. நாங்கள் மூன்றாது தடுப்பூசியையும்
செலுத்திக்கொண்டோம்.
30 வருட போரையும் முடிவுக்கு கொண்டு வந்தனர். வரிசை எதுவும் இல்லை. எமக்காக ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
ஜனாதிபதி பொது மக்கள் பற்றி கவலைப்படுகிறார். எரிவாயு, எரிபொருள் என அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களுக்காக ஜனாதிபதி துக்கப்படுகிறார்.
மக்கள் வரிசைகளில் இல்லை. தற்போது மக்கள் சுகமாக இருக்கின்றனர். மக்களை காப்பாற்றியுள்ளார். சரியான மகிழ்ச்சி. நாடு நன்றாக செல்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை என மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
