நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வாயிலில் ஜனாதிபதியைச் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன , இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அனுந்திக பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி சபைக்குள் நுழையும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பப்படட நிலையில் அதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்தும் உரப் பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் இன்றைய தினம் நடத்தப்படுகின்றது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி இன்றைய தினம் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.


12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri