அமெரிக்கா காங்கிரஸில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி!
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ள உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி அமெரிக்க காங்கிரஸில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். மெய்நிகர் உரையாக இது இடம்பெற்றது.
இந்த உரையின் பெரும்பகுதி உக்ரேனிய மொழியில் அமைந்திருந்தது. எனினும் இறுதிப்பகுதியில், வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனுக்கு ஆங்கிலத்தில் நேரடியாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
"நீங்கள் உங்கள் தேசத்தின் தலைவர். எனினும் நீங்கள் உலகத்தின் தலைவராக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். உலகத்தின் தலைவராக இருப்பது அமைதியின் தலைவராக இருக்க வேண்டும்" என்று அவர் இதன்போது கூறினார்.
தமது நாட்டின் மீது ரஷ்ய வான்வழித் தாக்குதலைக் குறைக்க பரப்பற்ற (No fly Zone)வான் மண்டலத்தை உருவாக்குமாறு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
1941 இல் பேர்ல் துறைமுகத்திலும், 11 செப்டம்பர் 2001 அன்று நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையை அவர் குறிப்பிட்டார். "எங்கள் நாடு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், மூன்று வாரங்களாக இப்போதும் இவ்வாறான தாக்குதல்களையே எதிர்கொண்டு வருகிறது" என்று கூறினார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
