மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
மாலைதீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் “இம்பீச்மென்ட்” கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் பாதுகாப்பு
குறித்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் தெரிய வருகையில், முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்ட போது மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையினால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
