இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், இங்கு இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலையை ஏற்றுமதி
பிரதமர் தினேஷ் குணவர்தன - ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியான ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று (20.2.2024) நடைபெற்றது.
இதன்போது, மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |