ஹரின் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து: அரச தரப்பு வழங்கிய விளக்கம்
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து தெரியாமல் கூறியதொன்றாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எஸ். பி. திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை, வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு என்பதனால் இலங்கை ஒருபோதும் இந்தியாவின் மாநிலம் அல்ல எனத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, இந்தியாவுடனான நட்புறவின் காரணமாக இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர் அல்ல
அத்துடன், ஹரின் பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும், அவரது அறிக்கைகள் பொதுஜன பெரமுனவால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர் தளம் பூஜ்ஜியமாக
வீழ்ந்ததாகவும் தற்போது அதன் வாக்காளர் தளம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri