சீலரத்ன தேரர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என இலங்கை ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல சீலரத்ன தேரர் (Battaramula Seelarathna Thero) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான் பகுதிக்கு இன்று மாலை சென்ற இலங்கை ஜெனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல சீலரத்ன தேரர் பல்வேறு மக்கள் சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
கிரான், கோரகல்லிமடு பகுதிக்கு சென்றிருந்த தேரர் அங்குள்ள மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினை தொடர்பிலும் கேட்டறிந்தார்.
அத்துடன் அப்பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்ற தேரர் அவர்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் குறித்தும் அறிந்துகொண்டார்.
மிக மோசமான நிலையில் உள்ள வீதிகள் ஊடாக நடந்துசென்று மக்களின் தேவைகள் குறித்து தேரர் அறிந்துகொண்டார்.
இதேவேளை மட்டக்களப்பு - மாவடிவேம்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கும் சென்று ஆலய கட்டுமான வேலை தொடர்பிலும் பார்வையிட்டார்.
இதன்போது ஆலய நிருவாகத்தினர் ஆலய கட்டிட வளர்ச்சி தொடர்பில் தமது மகஜரையும் தேரரிடம் கையளித்தனர்.
இதனையடுத்து தேரர் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள மக்கள் கவனிக்கப்படாதவர்களாகவே இருக்கின்றனர். நான் தற்போதுள்ள பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காக வரும்போது மட்டும் உறுதிமொழிகளை வழங்கும் அரசியல்வாதிகள் வெற்றிபெற்றதன் பின்னர் இந்த மக்கள் தொடர்பில் சிந்திப்பதில்லை.
இவ்வாறானவர்கள் குறித்து வாக்களிக்கும் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என தெரிவித்தார்.











இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
