மிஹிந்தலை விகாரையின் பாதுகாப்பு விவகாரம்: ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை புனித பூமிக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த தத்துவத்தை முழு உலகிற்கும் வழங்கிய தேரவாத பௌத்த பாரம்பரியத்தின் கேந்திர நிலையமாக திகழும் மிஹிந்தலை புனித பூமியை, அரசாங்கம் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித பூமியை பாதுகாக்க நடவடிக்கை
அத்துடன், வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை புனித பூமியை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு தரப்பினர் விரும்பவில்லை எனவும், இதன் காரணமாக மிஹிந்தலை புனித பூமியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 250 இராணுவத்தினரை மீளப்பெற தீர்மானத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிஹிந்தலை புனித பூமியின், பாதுகாப்பு கடமைகளில் இருந்து இராணுவத்தினர் மீளப் பெறப்பட்டுள்ள போதிலும், அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் பொலிஸ் தலைமையகம் இதுவரை எடுக்கவில்லை என பொலி்ஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
