அரசியலமைப்புச்சட்டத்தை மீற முயற்சிக்கும் ஜனாதிபதி-மரிக்கார்
நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே பொறிகளை வைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் பொறி

ஜனாதிபதி வைக்கும் பொறிகளுக்கு முடிவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இறுதி சூழ்ச்சியே தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர்கள் தேர்தரல நடத்த பணம் இல்லை என்று கூறுகின்றனர். உரிய நேரத்தில் சம்பளத்தையும் சமுர்த்தியை வழங்கவும் முடிந்த அரசாங்கத்தை அமைக்கவே தேர்தல் நடத்தப்படுகிறது.

அதேவேளை தற்போது எரிபொருள் கப்பலை தாமதப்படுத்தும் சூழ்ச்சி ஒன்றும் இருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக மூறி வந்த ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீற முயற்சித்து வருகிறார்.
பொறிகளை வைத்து தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், வீதியில் இறங்கி போராடப்போவதாகவும் மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து