ஜனாதிபதியே நிலக்கரி ஊழலின் மறைமுக சூத்திரதாரி: நாமலின் பாரிய குற்றச்சாட்டு
ஜனாதிபதி நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்க முற்படுவதோடு அதை ஒரு ஊழலாக அவர் கருதவில்லை என்றால் அவரும் இந்த நிலக்கரி ஊழலுடன் தொடர்புபட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தை கட்சி தலைமையகத்தில் நேற்று (02.04.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
நல்லாட்சியை போலவே என்பிபி அரசும்
இந்த அரசாங்கத்தின் கொள்கையும் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதுதான்.
பணப்பையை திருடி விட்டு இதோ திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடும் போது கிராமத்திலுள்ள அனைவரும் திருடனைப் பிடிக்க பணப்பையை திருடியவருக்கு பின்னால் ஓடுவார்கள்.
ஆனால் இறுதியில் திருடன் திருடன் என்று கத்தியவர் தான் உண்மையான திருடன். இந்த அரசாங்கமும் அப்படித்தான் செயற்படுகிறது.

இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நிலக்கரி ஊழலைச் செய்தவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்.
ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும் அவரது நடத்தையும் பார்க்கும்போது ஜனாதிபதி நிலக்கரி ஊழலுக்குப் பின்னால் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஏனெனில் சம்பந்தப்பட்ட நபரை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே உரக் கூட்டுத்தாபனத்திற்கு நியமித்துள்ளார்.
தற்போது அவரை ஒரு அமைச்சராக்கி தரம் குறைந்த நிலக்கரி ஊழலிலும் அவரைப் பாதுகாக்கின்றார் என்றால் ஜனாதிபதிக்கு இது ஒரு ஊழலாகத் தெரியவில்லை.
நிச்சயமாக இந்த ஊழலுக்குப் பின்னால் இருப்பது இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி அநுரவே ஆவார்.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam