வட மாகாணம் தொடர்பில் ஜனாதிபதியின் நோக்கம் இதுவே: சமன் ரத்னபிரிய
வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களைப் போன்று பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் சமமாக பார்க்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாக உள்ளது என ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (06.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரச்சினைகளுக்கான தீர்வு
பெருமளவு நிதி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திணைக்கள தலைவர்கள் ஊடாக வரையறையில்லாத பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதே இலக்காக இருக்கின்றது.
அதேவேளை, வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான பிரச்சினை 2025ஆம் ஆண்டளவில் முடிவுக்கு வரும். இதற்கு 250 மில்லியன் ரூபா நிதி வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பல்கலைக்கழகங்களில் சிங்கள, ஆங்கில மொழியில் மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்தில் மின்வலு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்காக 2.2 பில்லியனை செலவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள்
யாழ். மாவட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் காணிகள், வீடுகள் இல்லாதவர்களுக்கு அவற்றினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஒரு சிலர் விடுதலையாகியுள்ள நிலையில் ஏனையோரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளாந்தம் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டது என்றும் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கை சமூக விவகார பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 19 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
