வரவு செலவுத்திட்ட தேநீர் விருந்தை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் தேனீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி எடுத்த முடிவு
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சராக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரைக்கு பின்னர் நடத்தப்பட்ட தேனீர் விருந்துபசாரம், ஜனாதிபதியின் சொந்த பணத்தை செலவிட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.