சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோட்டாபய! பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ள விடயம் (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.
சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
பதில் ஜனாதிபதி நியமனம்
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
| பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு |