பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவார் என பிரதமரின் பேச்சாளர் தினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.