ஜனாதிபதிக்கு முதுகெலும்பில் பலம் இல்லையா : திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கம்
திருகோணமலையில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க எமது ஜனாதிபதிக்கு முதுகெலும்பில் பலம் இல்லையா என பகிரங்க கேள்வி ஒன்றை திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கம் கேட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
திருகோணமலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்த அரசாங்கம் தடுக்க முடியாமல் இருப்பதாகவும் இது தொடர்பில் ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டது போன்று பல கிலோ கணக்கில் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனை தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு முதுகெலும்பில் பலம் இல்லையா எனவும் விசனம் தெரிவித்தனர்.
மேலும் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது சட்ட விரோத மீன்பிடியினை முற்றாக தடை செய்வதாக வாக்குறுதியளித்து ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் ஏன் இந்த வேலையினை செய்ய மறுக்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யாமல் இருந்தால் எவ்வாறு நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பது மேலும் இந்திய மீனவர்கள் வடக்கு பிரதேசத்தில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் ஏன் எமது கடற்படைக்கு இதனை தடுக்க முடியாமல் உள்ளது ஏன் இரண்டு நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்படும் என ஐயம் கொள்கின்றனரா?
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்து தமது சொத்துக்களை சேமிக்கின்றனர் அவ்வாறு செய்வதனை விட்டு விட்டு இந்த நாட்டில் தினக்கூலி தொழிலாளிகளை பார்க்கவும் எமது மீனவர்களின் ஜீவனோபாயத்தினை பாதுகாக்கவும் திருகோணமலையில் இவ்வாறு பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் தருவதாக திருகோணமலை மாவட்ட அரசியல் வாதிகள் வாக்குறுதி தந்திருந்தனர்.
இதுவரை எந்த நிவாரணமும் எமக்கு கிடைக்க வில்லை நாட்டின் அரசியல் வாதிகளுக்கு நாட்டின் மேல் பற்று இருக்க வேண்டும் இவர்களுக்கு அவ்வாறு நாட்டு பற்று இல்லை நாட்டை ஆட்சி செய்வதாக இருந்தால் சரியாக ஆட்சி செய்ய வேண்டும் நாட்டின் அபிவிருத்தியினை மேம்படுத்த வேண்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என இறுதியாக ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ் ஊடக சந்திப்பில் மாவட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
