முதல் முறையாக பேத்தியை சந்தித்த ஜனாதிபதி - வெளியாகியுள்ள புகைப்படம்
முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ஜனாதிபதி, அதற்கு இடையில் தனது பேத்தியை சந்திக்க முடிந்ததாக கூறியுள்ளார்.
மும்மொழிகளிலும் ஜனாதிபதி இந்த பதிவை இட்டுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி,
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது முதல் முறையாக எனது பேத்தியை காண முடிந்தது.
மகன் மனோஜ் (Manoj Rajapaksa) மற்றும் மருமகள் செவ்வந்தி (Sewwandi) ஆகியோருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகனான மனோஜ் ராஜபக்சவின் மனைவி செவ்வந்தி ராஜபக்ச கடந்த மே மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
