இந்திய உதவி முடிவடைந்த பின்னர் அடுத்தக்கட்டம் என்ன! இன்னும் வெளியாகாத ஜனாதிபதியின் திட்டம்
இந்தியாவின் தாராள மனப்பான்மையால் வழங்கப்படும் மின்சாரம், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருத்துவ பொருள் உதவிகள் முடிவடைந்த பின்னர் இலங்கை மக்களுக்கு இந்த பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் திட்டங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டு மக்களுக்கு எதனையும் அறிவிக்கவில்லை.
எனினும் அதற்கு மத்தியில் அனைத்து கட்சி அரசாங்கம் என்ற கருத்துக்களத்துக்கு அவர் நேரத்தை செலவிடுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாட்டில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளன.
அத்துடன் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து ஏற்கனவே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பில் இருந்து உணவு விநியோகம் தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை.



