ஜனாதிபதி நிதியத்தில் பெரும் மோசடி: பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும் என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது..
மேற்படி சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெறும் நபர், தான் குறைந்த வருமானம் ஈட்டுபவர் என பிரதேச செயலாளரின் ஊடாக சான்றளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மாதாந்த வருமானம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்
“பணம் கோரும் நபரின் மொத்த மாதாந்த வருமானம் குறைவாக இருந்தால் மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் விடுவிக்கப்படவேண்டும்.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல
குறிப்பாக நீதிமன்றம் பணக் கணக்கை முடக்கி வைக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டதையடுத்து, பொருத்தமான நிபந்தனைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் அமைச்சரும் செல்வந்தருமான கெஹலிய ரம்புக்வெல்ல ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நூறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி நிதி என்பது பொதுப் பணம் என்பதால், பொய்யான தகவல்களை அளித்து அந்தப் பணத்தை அபகரிப்பது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri
