இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - பேரப்பிள்ளையை பார்ப்பதை தவிர்த்த ஜனாதிபதி
அமெரிக்காவில் தனக்கு பேரப்பிள்ளை பிறந்துள்ள போதிலும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அங்கு செல்வதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷவுக்கு நேற்று அமெரிக்காவில் மகள் பிறந்துள்ளார்.
மகிழ்ச்சியான இந்த தருணத்தில் அங்கு செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் ஆபத்தான நிலைமை காரணமாக ஜனாதிபதி அந்த பயணத்தை பிற்போட தீர்மானித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்களுடன் இருப்பதே முக்கியம் என கூறிய ஜனாதிபதி, கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே தனது தற்போதைய நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள பேரப்பிள்ளையை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ மாத்திரம் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
