றீ(ஷ்)சா ஒருங்கிணைந்த பண்ணைக்கு ஜனாதிபதி விருது
கொழும்பில் (Colombo) நடைபெற்ற சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் (President Environment Awards - 2024) றீ(ஷ்)சா ஒருங்கிணைந்த பண்ணை வெண்கல விருதை (Bronze Award) வென்றுள்ளது.
குறித்த விருது வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் (29.06.2024) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 11ஆவது முறையாக இடம்பெற்றுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் (Central Environmental Authority) நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வெற்றிக்காக உழைத்தவர்கள்
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த வைபவத்தில் விருதுகளைப் பெற்றுக் கொண்டன.
மேலும், இந்த வெற்றிக்காக உழைத்த றீ(ஷ்)சா நிறுவனத்தின் இயக்குனர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இதன்போது நன்றியுடன் நினைவு கூரப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
