ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே பேராதரவு: மொட்டு எம்.பி திட்டவட்டம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிட வேண்டும். அவருக்கு நான் நிச்சயம் ஆதரவு வழங்குவேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியம்.
ஆளுங்கட்சிக்குள் மோதல்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். நாம் ஜனாதிபதி பக்கம் நிற்போம்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் மோதல் இல்லை.
தற்போதைய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் வாக்களித்தனர்.
நெருக்கடி நிலைமை
நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடியும் என்ற நம்பிக்கையிலேயே 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு வழங்கினர்.
நான் முக்கிய பதவியை வகிக்கலாம். நெருக்கடி நிலைமை என்ன என்பது புரியும். எனவே, ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வரவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |