பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் தரப்புக்கள் கருத்து
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என அரசியல் தரப்புக்கள் ஊகங்கள் வெளியிட்டுள்ளன.
பொதுத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே இடம்பெறும் என்று பிரதான நீரோட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
ஜனாதிபதித் தேர்தல்
இந்தநிலையில், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அரசியலமைப்பு அட்டவணையின்படி முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது பொதுத் தேர்தலில் போட்டியிடுவது அவர்கள் நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேவிபி தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்புகிறது.
எனினும் ஜனாதிபதிக்கு இப்போது பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அரசியலமைப்பு அதிகாரம் உள்ளதை அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொழும்பில் பிரபல தனியார் உணவகத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |